ஞாயிறு, 23 நவம்பர், 2008

பவித்ரன் இயக்கும் `மாட்டுத்தாவணி'க்காக 100 நடன கலைஞர்களுடன் ஒரு பாடல் காட்சி!


வசந்தகால பறவைகள், சூரியன், ஐ லவ் இந்தியா உள்பட பல படங்களை டைரக்டு செய்த பவித்ரன் இப்போது, `மாட்டுத்தாவணி' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
இந்த படத்துக்காக,
``அண்ணன்மாரே...தம்பிமாரே...அம்மாமாரே...அய்யாமாரே...கல்லூரி மாணவன் பன்னீரின் கதையை கேளுங்க...'' என்ற பாடலை, முதல்-அமைச்சர் கருணா நிதியின் மகன் மு.க.முத்து சொந்த குரலில் பாடினார். தேவா இசையில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டது.
அநியாயமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு, தூக்கு கயிறுக்கு அடியில் நிற்கும் கதா நாயகனை காப்பாற்றுவதற்காக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்களிலும், லாரி களிலும் திரண்டு வந்து போராடுவது போல் இந்த பாடல் காட்சி படமானது.
ஏவி.எம்.ஸ்டூடியோவின் 4-வது அரங்கில் 100 நடன கலைஞர்கள் உணர்ச்சிகரமாக ஆடுவது போலவும் அந்த பாடல் காட்சி படமானது. 4 காமிராக்கள் மூலம் இந்த பாடல் காட்சியை ஒளிப்பதிவாளர் ஸ்ரீகணேசன் படமாக்கினார். இத்துடன், `மாட்டுத்தாவணி' படப்பிடிப்பு முடிவடைந்தது.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை டாக்டர் பி.விஜயகுமார் தயாரிக்கிறார்.

"கடற்கரை' படத்தில் ருசிகர காட்சி 10 காசுக்கு ஒரு முத்தம்!




கல்லூரிகளில் மாணவர்களுக்குள் `கோட் வேர்டு' என்று சொல்லப்படும் பரிபாஷைகள் உண்டு. ஒரு பெண்கள் கல்லூரியில், `பத்து காசு' என்று ஒரு சங்கேத வார்த்தை பிரபலம். அந்த கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி, `சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரை காதலிக்கிறாள். காதலனை சந்திக்க, தோழியுடன் செல்கிறாள்.
காதலர்களை தனிமையில் சந்திக்கவிட்டு விலகி நின்ற தோழி, ``அந்த பத்து காசை மறக்காமல் கேட்டு வாங்கிக்கடீ'' என்று சிரித்தபடி சொன்னாள்.
அதன்படி காதலி தன் காதலனிடம், ``எனக்கு பத்து காசு கொட்ஜ்ங்க'' என்று கேட்கிறாள். ``அதென்ன பத்து காசு?'' என்று காதலன் புரியாமல் விழிக்க- அவன் கன்னத்தில் அவள், `பச்சக்' என்று ஒரு முத்தம் கொடுத்து, ``இதுதான் அந்த பத்து காசு'' என்று சொல்லி சிரிக்கிறாள்.
இன்ப அதிர்ச்சி அடைந்த காதலன், விழி பிதுங்கி நிற்கிறான்.
இப்படி ஒரு காட்சி, `கடற்கரை' படத்துக்காக படமாக்கப்பட்டது. இதில் காதலனாக புதுமுகம் எஸ்.ஏ.உதய், காதலியாக நிவேதா ஆகிய இருவரும் நடித்தார்கள். கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, `டிஷ்ம்' சோமன் டைரக்டு செய்தார். இந்த படத்தை மில்லியோ பிக்சர்ஸ் சார்பில் கனடா மில்லியோ தயாரிக்கிறார்.
காதலும், மர்மமும் கலந்த திகில் கதை இது.

சனி, 22 நவம்பர், 2008

படங்கள் தோல்வி அடைந்தால் நடிகைகள் மீது பழி சுமத்துகிறார்கள்-தமன்னா


தமிழ்- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உலா வருப வர் தமன்னா. இவர் ஐதரா பாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பின் போது நிரு பர்களிடம் கூறியதாவது:-
சினிமாவில் பெரும்பா லும் நடிகைகளுக்கு ஆவ்வள வாக முக்கியத்துவம் இருப்ப தில்லை. ஒரு சில படங் களில்தான் ஓரளவு முக்கி யத்துவம் தருகிறார்கள்.
சில படங்களில் நாயகி 3 பாடலுக்கு நடனம், ஏழெட்டு காட்சிகளில் மட்டும்தான் தோன்றுவார். அந்த படம் வெற்றி பெற்றால் நடிகர் களுக்கு புகழ் சென்று விடு கிறது.
ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தால் அதில் நடித்த நடிகையால்தான் தோல்வி அடைந்து விட்டது என்று வீண் பழி போடு கிறார்கள்.
இந்த வீண் பழியால் எத் தனையோ புதுமுக நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
என்னைப் பொறுத்த வரையில் ஓரளவு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தான் நடிக்கிறேன். நல்ல கதையை தேர்வு செய்து நடித்தால்தான் மார்க்கெட்டை தக்க வைக்க முடியும். "எனக்கு நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவருக்கு அடிக்கடி போன் செய்து நடிப்பு பற்றி கற்றுக் கொள்கிறேன். சந்திரமுகி, மொழி படங்களை பார்த்ததில் இருந்து நான் ஜோதிகாவின் தீவிர ரசிகை ஆகிவிட்டேன். தற்போது நான் தமிழில் 6 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.
அதிக விபரங்களுக்கு "கனவு தொழிற்சாலை" பார்க்கவும்.

செவ்வாய், 18 நவம்பர், 2008

`மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் தயாரிப்பாளரை கண்கலங்க வைத்த `கிளைமாக்ஸ்'


`பிடிச்சிருக்கு' படத்தை தயாரித்த கூல் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரித்துள்ள படம், `மகேஷ் சரண்யா மற்றும் பலர்.' இந்த படத்தில் சக்தி (டைரக்டர் பி.வாசுவின் மகன்), கீர்த்தி சாவ்லா, சரண்யா மோகன் கதாநாயகன்-கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் சந்தானம், `கல்யாணமாலை' மோகன், வினோதினி, மோகனப்ரியா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்பவர், பி.வி.ரவி. இவர், டைரக்டர் லிங்குசாமியிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.
கதைப்படி சக்தி, ஒரு கல்லூரி மாணவர். சந்தியா, கல்லூரி மாணவி. இருவருக்கும் இடையேயான கவித்துவமான காதலை, கதை சித்தரிக்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலும், கும்பகோணம் ரெயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை பார்த்த தயாரிப்பாளர் சித.செண்பககுமார் கண்கலங்கி, டைரக்டர் ரவியை கட்டிப்பிடித்து பாராட்டினார். அதோடு தனது அன்பு பரிசாக 10 பவுன் சங்கிலியை டைரக்டர் ரவியின் கழுத்தில் அணிவித்தார்
.

`திருவண்ணாமலை' படத்துக்காக 150 சாமியார்கள் நடித்த பாடல் காட்சி


கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்க, பேரரசு டைரக்டு செய்து வரும் `திருவண்ணாமலை,' ஆன்மீகம் கலந்த அதிரடி சண்டை படம்.
கதாநாயகன் அர்ஜுன், உள்ளூரில் `சேனல்' நடத்துபவர். தனது சேனலில் நல்ல விஷயங்களை ஒளிபரப்பி, முக்கிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறார். இதனால் அவர் ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அந்த பிரச்சினையில் இருந்து அவர் எப்படி வெளிவருகிறார்? என்பதே கதை.
அர்ஜுன், சிவலிங்கத்தை கையில் ஏந்தியபடி, நூற்றுக்கணக்கான சாமியார்கள் மத்தியில் பாடி வருவது போல் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது.
``உலகை ஆளும் ஈசனே'' என்று தொடங்கும் அந்த பாடல் காட்சியில், திருவண்ணாமலையில் உள்ள அசல் சாமியார்களை நடிக்க வைக்க முடிவு செய்தார்கள்.
முதலில் மறுத்த சாமியார்கள், பாடலை கேட்டபின், அதில் நடிக்க சம்மதித்தார்கள். அந்த பாடல் காட்சியில் 150 சாமியார்கள் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் நடித்தார்கள். அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. படம், அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.

திங்கள், 17 நவம்பர், 2008

ரூ.1 கோடி சம்பளம் - கரன்.


கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் உள்ளிட்ட படங்களின் தொடர் வெற்றி நடிகர் கரனை ரொம்பவே மாற்றி விட்டது.
யாகியாபாய் எனும் எப். எம்.எஸ். டிஸ்ட்ரிபியூட்டர் முதன் முதலாக கரனை வைத்து ஒரு படத்தை ஆரம்பிக்க இருந்தார். ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய இயக்குனரான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த இப்படத்தின் கதையை கேட்ட கரன், டபுள் ஓ.கே. சொல்லிவிட்டு கடைசி வரை சம்பளம் பற்றி சொல்லாமமல், ஆபீஸ் போடுங்கள், டிஸ்கஷன் செய்யுங்கள் என்று கட்டளையிட... வடபழனியில் புரடக்ஷன் ஆபீஸ், அது- இது என்று படத்திற்காக ஆரம்ப நிலையிலலேயே பல லட்சங்கள் செலவாகி விட்டன. இந்நிலையில் கால்ஷீட் கேட்கப்போன யாகாயா பாயிடம் ரூ.1 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் கரன். ஆடிப்போன புரடியூசர் ஆபீஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டாராம்.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

`ராக்கி'


ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற `ராக்கி' என்ற தெலுங்கு படம், அதேபெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர், பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சாயாஜிஷிண்டே, கோட்டா சீனிவாசராவ், இலியானா, சார்மி, சுஹாசினி ஆகியோர் நடித்த படம் இது. கிருஷ்ணவம்சி, டைரக்டு செய்து இருக்கிறார். சான்ட்ராஸ் கம்னிகேஷன் நிறுவனம் சார்பில் பைஜு தேவராஜ் தயாரிக்கிறார்.
வரதட்சணை கொடுமைப்படுத்தி தன் தங்கையை கொன்ற கும்பலை, ஒரு இளைஞன் அதேபாணியில் கொலை செய்து, பழிக்கு பழி தீர்க்கிறான். தன் தங்கையைப்போல் பெண்களுக்கு எங்கெல்லாம் கொடுமை நடக்கிறதோ, அங்கெல்லாம் ஆஜராகி, குற்றவாளிகளை ஒழித்துக்கட்டுகிறான்.
அநீதியை எதிர்க்க, பெண்கள் தங்களை பலம் வாய்ந்தவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறி, இறுதியில் சட்டத்தின் முன் சரணடைகிறான். இதுவே, `ராக்கி' படத்தின் கதை.

வெள்ளி, 14 நவம்பர், 2008

ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் "எல்லாம் அவன் செயல்"


தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம், `கரகாட்டக்காரன்.' இந்த படத்தை தயாரித்த கருமாரி கந்தசாமி-ஜே.துரை ஆகிய இருவரும் நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் தயாரிக்கிறார்கள்.
ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் உருவாகும் இந்த படத்துக்கு, `எல்லாம் அவன் செயல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
`வாழ்த்துக்கள்,' `தூண்டில்' ஆகிய படங்களில் நடித்த ஆர்.கே, இந்த படத்தில் சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் துணிச்சல்மிக்க வக்கீலாக நடிக்கிறார்.
கதாநாயகியாக மலையாள நடிகை பாமா அறிமுகம் ஆகிறார். மும்பையை சேர்ந்த 9 மாடல் அழகிகளும் பங்கு பெறுகிறார்கள்.
வண்டு முருகன் என்ற நகைச்சுவை வக்கீல் வேடத்தில், வடிவேல் நடிக்கிறார். கோர்ட்டுக்கு வரும் குற்றவாளிகளை தனது வாத திறமையால் நிரபராதிகளாக்கி வெளியே அனுப்பி, அவர்களிடமே சிக்கி சின்னாபின்னப்படும் பாத்திரத்தில் வடிவேல் வருகிறார்.
மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், மணிவண்ணன், விசு, மனோஜ் கே.ஜெயன், தலைவாசல் விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரகுவரன், கடைசியாக நடித்த படம் இதுதான். ரோஜா, சுகன்யா ஆகிய இருவரும் முக்கிய வேடங்கள் ஏற்றுள்ளனர்.
சென்னை, விசாகப்பட்டினம், எர்ணாகுளம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது

வியாழன், 13 நவம்பர், 2008

குண்டு உடம்பால் கவலைப்படும் ஹன்சிகா






தெலுங்கு படவுலகில் இருந்து இந்தி சினிமா பக்கம் போனவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தற்‌போது இந்தியில் ஆப் கா சரூர் உள்ளிட்ட இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.


இந்த படங்களின் 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தெலுங்கு பட வாய்ப்பு வந்ததால் தெலுங்கு படமொன்றில் நடித்தார். தெலுங்கு படத்தை முடித்து விட்டு மீண்டும் இந்தி பக்கம் போனவருக்கு பிரச்னை குண்டு உடம்பு ரூபத்தில் வந்துள்ளது. இடைப்பட்ட இரு மாதத்தில் குண்டடித்த விட்டதால் இந்தி படங்களின் சூட்டிங்கை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் உடல் எடையை குறைப்பது பற்றி ஆலோசித்த வருகிறார் ஹன்சிகா மோத்வானி.

‘பேட்டைமுதல் கோட்டைவரை'



அடுத்து சத்யராஜ் நடிக்கும் படத்தின் பெயர்தான் 'பேட்டைமுதல் கோட்டைவரை'
தங்கர்பச்சான் இயக்கும் 'தொலைந்து போனவர்கள்' படத்தில் நடிப்பவர், 'பேட்டைமுதல் கோட்டைவரை' என்ற படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இதில் சத்யராஜூடன் நெப்போலியனும், நாசரும் நடிக்கிறார்கள். எம். ஜமீன்ராஜ் படத்தை இயக்குகிறார். தேவா இசையமைக்கிறார்.
வரும் பதினெட்டாம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த வருட தொடக்கத்தில் தங்கர்பச்சான் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.
நல்ல கதையம்சம் உள்ள படம் வந்தால் மட்டும் நடித்தால் போதும் என்று அவருக்கு அவரே கட்டு்பாடு போட்டுள்ளார்.

ஆனந்தபுரத்து வீடு


தமிழ் பட உலகுக்கு பல பிரமாண்டமான படங்களை அளித்த டைரக்டர் ஷங்கர், ஒரு தயாரிப்பாளராக, மற்ற டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து படங்களை தயாரித்தும் வருகிறார். `காதல்,' `வெயில்,' `இம்சை அரசன் 23-ம் புலிகேசி' போன்ற படங்கள், அவருடைய `எஸ் பிக்சர்ஸ்' சார்பில் தயாரானவை.
அடுத்து `எஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் புதிய படத்துக்கு, `ஆனந்தபுரத்து வீடு' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
மர்மதேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய நாகா, இந்த படத்தின் கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார். சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக வித்தியாசமான கதைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய நாகா, இயக்கும் முதல் படம் இது.
இதில், கதாநாயகனாக நந்தா நடிக்கிறார். கதாநாயகி, சாயாசிங். இவர்களுடன் கிருஷ்ணா, கலைராணி, மற்றும் புதுமுகங்கள் நடிக்க, `ஆரியன்' என்ற மூன்று வயது சுட்டிக்குழந்தை முக்கிய வேடத்தில் அறிமுகம் ஆகிறான்.
அமெரிக்காவில், எம்.எப்.ஏ. பயின்ற அருண்மணிபழனி, இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். ரமேஷ்கிருஷ்ணா என்ற புதிய இசையமைப்பாளர், இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். படத்தின் திரைக் கதையை நாகா, இந்திரா சவுந்தரராஜன், சரத் ஆகிய மூன்று பேரும் அமைத்து இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு, கேரளாவில் தொடங்கியது. தொடர்ந்து மூணாறு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.